பிரண்ட்-அ போல யாரு மச்சா.....? குடும்பத்தை மறந்து, தற்கொலையிலும் இணைந்த நண்பர்கள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
என் நண்பன் சென்ற இடத்திற்கே நானும் சென்று விடுவேன் என்று கூறி இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை, குரோம்பேட்டையில் உள்ள லக்ஷ்மிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் சரத்குமார் (35), ராஜேஸ்வரி (28) தம்பதியினர். இவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். குமார் அங்கு ஆட்டோ ஓட்டி சம்பாதித்து, குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவரின் சிநேகிதர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் நண்பரின் இறப்பில் இருந்து மீள முடியாத துன்பத்தில் இருந்து வந்துள்ளார் குமார். கவலையை மறக்க தினமும் அதிகளவில் குடித்து, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு எப்போதும் போல குடித்துவிட்டு வந்து, உள்பக்கம் தாளிட்டு படுத்துள்ளார். மனைவியும் வருத்தத்தில் இருக்கும் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என நினைத்து, பக்கத்து அறைக்கு சென்று குழந்தைகளுடன் உறங்கியுள்ளார்.
ஆனால் நேற்று வெகுநேரம் ஆகியும் குமார் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த மனைவி அக்கம்பக்கத்தினரை சத்தம் போட்டு எழுப்பியுள்ளார். பதற்றத்துடன் அவர்கள் வந்து கதவை திறந்து பார்க்க மின்விசிறியில் தொங்கிய நிலையில் குமார் சடலமாக இருந்துள்ளார். இதன்பின் குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுபற்றி ராஜேஸ்வரி போலீசாரிடம் கூறியிருப்பதாவது, "என் நண்பன் சென்ற இடத்திற்கே நானும் சென்று விடுவேன் எனக் கூறி தினமும் அழுவார். அதிகம் குடித்துவிட்டு வந்து நண்பனை நினைத்து புலம்புவார். அடிக்கடி என் நண்பன் சென்ற இடத்திற்கு நானும் சென்றுவிடுவேன் என்பார்" என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments