ஈபிள் டவர் மேல் கயிற்றில் நடந்த இளைஞர்… தெறிக்கவிடும் வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகத்திலேயே உயரமான அடையாளச் சின்னமான ஈபிள் டவரில் 230 அடி உயரத்தில் கயிற்றைக் கட்டி அதன் மேல் இளைஞர் ஒருவர் நடந்துவந்த வீடியோ கடந்த சில தினங்களகாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஈபிள் டவரில் கயிற்றை கட்டிய அந்த இளைஞர் மறுமுனையில் உள்ள சாய்லேட் தியேட்டரில் அதை இணைத்த நிலையில் பத்திரமாகத் தரையிரங்கிய காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நாதன் பவுலின் எனும் 27 வயது இளைஞர் கடந்த சனிக்கிழமை ஈபிள் டவரில் 230 அடி உயரத்தில் கயிற்றைக் கட்டி மறுமுனையில் உள்ள சாய்லேட் தியேட்டரில் அதை இணைத்து இருக்கிறார். இந்நிலையில் 230 அடி உயரத்தில் கட்டப்பட்ட அந்தக் கயிற்றில் நாதன் அசலாட்டாக வெறும் காலுடன் நடந்து வந்துள்ளார். மேலும் அவர் 2,200 அடி வரையிலும் நடந்து வந்து தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.
நாதன் பவுலின் செய்த இந்த சாகசக் காட்சிகளை ஈபிள் டவருக்கு கீழ் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்தோடு கண்டுகளித்தனர். மேலும் ஐரோப்பிய கலாச்சார திருவிழாவை ஒட்டி நாதன் பவுலின் இந்த சாகசத்தைச் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஐரோப்பாவில் கொண்டாடப்படும் பாலின் கலாச்சார திருவிழாவிற்கு முன்பு ஒலிம்யாட் எனும் விழாவும் கொண்டாடப்படுவது வழக்கமாம்.
இந்த திருவிழாவையொட்டி நாதன் பவுலின் ஈபிள் டவரில் ஏறி கயிற்றில் நடந்து இருக்கிறார். இதற்கு முன்பு லாடி- டிபென்ஸ்ஸில் உள்ள இரு வணிக கட்டிடத்திற்கு இடையே கயிற்றைக் கட்டி 490 அடி உயரத்தில் கிட்டத்தட்ட 1,700 அடி தூரம் நடந்திருக்கிறார். நாதன் பவுலின் செய்த இந்த சாகசத்தைப் பார்த்து பலரும் உற்சாகம் அடைந்ததோடு அவரை பாராட்டவும் செய்துள்ளனர்.
#French tightrope walker Nathan Paulin walks along a 70m high line attached to #EiffelTower. He had a safety line attached so he’d be OK if he fell.????pic.twitter.com/1AqFfrYTJU
— Auron (@auron83591234) September 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout