விஜே சித்ரா நடித்த திரைப்படத்திற்கு இலவச டிக்கெட்: அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,February 26 2021]

சின்னத்திரை நடிகையும் விஜேயுமான சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத் திரை உலகை மட்டுமின்றி பெரிய திரையையும் அதிரச் செய்தது. சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா நடித்த முதலும் கடைசியுமான திரைப்படம் ’கால்ஸ்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் பிப்ரவரி 26-ஆம் தேதி அதாவது இன்று இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது சித்ரா நடித்த ’கால்ஸ்’ திரைப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்பதாலும் பெண்கள் இந்த படத்தை பார்க்க ஊக்குவிக்கும் விதமாக சென்னையில் உள்ள திரை அரங்குகளில் இந்த படத்தை காண வரும் பெண்களுக்கு இலவச அனுமதி என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை அடுத்து பெண்கள் இந்த படத்தை இலவசமாக காணும் வாய்ப்பை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.