வாக்களிக்க செல்லும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்...!உபர் அதிரடி அறிவிப்பு...!
- IndiaGlitz, [Monday,April 05 2021]
வாக்களிப்பதிற்காக ஓட்டுச்சாவடி மையங்களுக்கு செல்லும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக, உபர் நிறுவனத்துடன் தேர்தல் ஆணையம் இணைந்து புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு கூறியிருப்பதாவது,
80-வயதிற்கும் அதிகமான முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுபோடுவதற்கு வாக்குப்பதிவு மையத்திற்கு அழைத்துச்சென்று, வாக்களித்தபின் அவர்களை வீட்டில் கொண்டுவந்து விடும் இலவச கார் சேவையை உபர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்திடமிருந்தும் ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது. இச்சேவையானது சென்னை, கோவை மற்றும் திருச்சி நகரங்களில் உள்ள மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பயன்படும். பயண அளவானது 5 கிலோமீட்டருக்கு உள்ளேயும், ரூ.200-க்கு குறைவாகவும் இருந்தால் தான்,இச்சேவை பயன்படும். உபர் செயலியை பதிவிறக்கம் செய்து, இச்சேவையை நாம் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக பணம் ஏற்பட்டால், வாடிக்கையாளர் பணம் செலுத்தும் படி நேரிடும் என்று அவர் கூறினார்.