விலையில்லா டேட்டா கார்டு, தினமும் 2ஜிபி இலவசம்: முதல்வரின் அசத்தல் அறிவிப்பு!

இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு கல்லூரி, அரசின் உதவி பெறும் சுய நிதி கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் வரை நாளொன்றுக்கு 2 GB டேட்டா இலவசம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதற்காக விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு அம்மா அவர்கள்‌ எடுத்த நடவடிக்கைகள்‌ மற்றும்‌ மாண்புமிகு அம்மாவின்‌ அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின்‌ காரணமாக உயர்கல்வி பயிலும்‌ மாணாக்கர்களின்‌ சேர்க்கை விகிதம்‌ தமிழ்நாட்டில்‌ 32 சதவீதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும்‌, கல்லூரி மாணாக்கர்கள்‌ சிறந்த கணினி திறன்களை பெற்றிட மாண்புமிகு அம்மாவின்‌ அரசு, அரசு கல்லூரிகள்‌ மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்‌ வழங்கும்‌ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கோவிட்‌-19 பெருந்தொற்றின்‌ காரணமாக கல்லூரிகள்‌ மூடப்பட்டுள்ள நிலையில்‌, கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்களின்‌ நலனுக்காக கல்வி நிறுவனங்கள்‌ இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில்‌ மாணாக்கர்கள்‌ கலந்து கொள்ள ஏதுவாக, அரசு மற்றும்‌ அரசு உதவிப்பெறும்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகள்‌, பாலிடெக்னிக்‌ கல்லூரிகள்‌, பொறியியல்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ கல்வி உதவித்‌தொகை பெறும்‌ சுயநிதி கல்லூரிகளில்‌ பயிலும்‌ 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல்‌ ஏப்ரல்‌ 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு பெற்றிட எல்காட்‌ நிறுவனத்தின்‌ மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள்‌ வழங்கிட நான்‌ உத்தரவிட்டுள்ளேன்‌.

இக்கோவிட்‌ பெருந்தொற்று காலத்திலும்‌ இணைய வழி வகுப்புகள்‌ மூலமாக சிறந்த முறையில்‌ கல்வி கற்றிட மாண்புமிகு அம்மாவின்‌ அரசால்‌ வழங்கப்படும்‌ விலையில்லா தரவு அட்டைகளை நல்ல முறையில்‌ பயன்படுத்தி கல்வியில்‌ மேன்மேலும்‌ சிறக்க வேண்டுமென்று மாணாக்கர்களை அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

ஓம் நமசிவாயா: 'மாஸ்டர்' இயக்குனரின் வைரலாகும் டுவீட்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்

பிக்பாஸ் முடிஞ்சதும் நேரா காட்டுக்கு போயிடுவேன்: கமலிடம் சொன்ன போட்டியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 98 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் உச்சகட்ட விறுவிறுப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

முதல்முறையாக கண்கலங்கி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்ட ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஆரியிடம் பாலாஜி மன்னிப்பு கேட்பதை வாரத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ வழக்கமாக வைத்திருந்தார் என்று சொல்லலாம்.

எதிர்ல வர்றது எமனா இருந்தாலும் பயப்படக்கூடாது: 'மாஸ்டர்' விஜய்சேதுபதியின் மாஸ் வசனம்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த மா.க.பா!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவரும், நடிகருமான மா.க.பா தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது