கட்டணம் இல்லாத இலவச செல்போன் குறைதீர்ப்புத் திட்டம்… முதல்வரை பாராட்டும் சாமானிய மக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
1100 என்ற செல்போன் எண்ணைக் கொண்டு இனி இலவசமாக மக்கள் தங்களின் குறைகளை நேரடியாக தெரிவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனடியாக தங்களின் செல்போன் மூலம் அதுவும் இலவசமாகத் தெரிவிக்க முடியும்.
இதற்காக முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 78 லட்சம் செலவில் சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து 110 விதியின் கீழ் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தற்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தங்களுக்கென தனித்தனியே துறைவாரியான மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும் என்றார். இதற்காகத் தற்போது ரூ.12 கோடியே 78 லட்சம் மதிப்பில் 100 இருக்கைகளுடன் முதல்வரின் உதவி அழைப்பு மையம் சென்னை சோழிங்க நல்லூரில் எற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை குறைகளை தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை 24 மணிநேரமும் CMHelpline.tnega.org என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிவிக்கலாம். இந்நிலையில் பயன்பாட்டிற்கு வந்த சிறப்பு 1100 இலவச செல்போன் திட்ட அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments