4ஆவது டெஸ்ட்டில் ட்ரா செய்துவிட்டால்? ஜோ ரூட்டின் கணிப்பை கேலி செய்யும் நெட்டிசன்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி 2-1 என்ற நிலையில் முன்னிலைப் பெற்று இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து இதில் ஒரு போட்டியில் மட்டுமே வென்று பின் தங்கியுள்ளது. இந்த பின்னடைவால் இங்கிலாந்தின் லார்ட்சில் நடைபெற இருக்கும் ஐசிசி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து அணி பங்குபெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில் தான் இடம்பெறா விட்டாலும் பரவாயில்லை, எதிர் அணியையாவது தடுத்து நிறுத்த முடியுமா? என்ற நப்பாசைக்கு தயாராகி வருகிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட். எனவே நாளை தொடங்க இருக்கும் 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை எப்படியாவது ட்ரா செய்து விட்டால் பரவாயில்லை என்ற கருத்துக் கணிப்பை தற்போது வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், முதல் பிங்க் பால் போட்டியின் (3 ஆவது டெஸ்ட் போட்டி) போது பிட்சை குறித்து கணிக்கத் தவறு செய்துவிட்டோம். இதனால் அணித் தேர்விலும் தப்பு நடந்து விட்டது. எனவே அடுத்த போட்டியில் ஸ்பின் பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த உள்ளோம். இந்தத் தந்திரத்தால் எப்படியாவது போட்டியை ட்ரா செய்துவிட வேண்டும்.
அதோடு, “அயல்நாட்டில் கடினமான சூழ்நிலைகளில் வெற்றி பெறுவது பெருமகிழ்ச்சி. அனைவரும் சேர்ந்த இந்த வெற்றியையும் தொடர் ட்ராவையும் சாதிக்க முடிந்தால் உண்மையில் இந்த அணி என் பெருமைக்குரிய அணிதான்” எனக் கூறி இருக்கிறார். ஜோ ரூட்டின் இந்தக் கணிப்பை பார்த்து பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். காரணம் 4 ஆவது டெஸ்ட் போட்டியிலும் ஸ்பின் பந்துதான் எடுபடும். இதனால் அடுக்கடுக்கான விக்கெட்டுகள் சரிந்து போட்டி 2 நாட்கள் நீடிப்பதே கடினம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
அதிலும் ரஹானே அகமதாபாத் கிரிக்கெட் பிட்சை குறித்து ஸ்பின் பிட்ச்தான் என்றும் இந்திய கேப்டன் விராட் போட்டியை 5 நாட்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை வெற்றிதான் முக்கியம் எனக் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமலே ஜோ ரூட் கூறி இருக்கும் ட்ரா கருத்து பெரும் வியப்பை உண்டாக்கி இருக்கிறது. இதனால் நெட்டிசன்கள் பலரும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை கிண்டல் செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout