இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நேரில் ரசிக்கும் 4 சூப்பர் ஸ்டார்கள்..!

  • IndiaGlitz, [Saturday,October 14 2023]

கடந்த சில நாட்களாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது என்பதும் அந்த அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் குவிந்துள்ளனர்.

ஏற்கனவே ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரடியாக பார்க்க அகமதாபாத் சென்று உள்ளதாக கூறப்பட்டது. அவருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது.

அதேபோல் கோல்டன் டிக்கெட் பெற்றுள்ள இன்னொரு சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இன்றைய போட்டியை நேரில் பார்க்க வருகிறார். இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், அவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் போட்டியை நேரில் பார்க்க வந்த நிலையில் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.