4 லொகேஷன் ரெடி.. 'சூர்யா 43' படப்பிடிப்பு எப்போது? கசிந்த தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,February 24 2024]

நடிகர் சூர்யா நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நான்கு இடங்களில் நடைபெற இருப்பதாகவும் வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது அந்த படத்திற்கான டப்பிங் பணியில் உள்ளார். இந்த படத்தின் பணிகளை முடித்தவுடன் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘சூர்யா 43’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான முழு ஏற்பாடும் தற்போது தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

மார்ச் 1ஆம் தேதி முதல் மதுரையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் இதையடுத்து திருச்சி, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் 4ஆம் கட்ட படப்பிடிப்பு ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவாரி என்ற பகுதியில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 100வது படமாக இந்த படம் அமைந்திருப்பதை அடுத்து பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆக்க வேண்டும் என்பதற்காக அவரும் பாடல் கம்போசிங் பணியில் விறுவிறுப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு தான் நடிகர் சூர்யா பாலிவுட்டில் தயாராக இருக்கும் ’கர்ணா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

த்ரிஷா விவகாரத்தில் 2வது முறையாக புகார் அளித்த கருணாஸ்.. இந்த முறை யார் மீது?

நடிகர் கருணாஸ் ஏற்கனவே தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜூ மீது காவல்துறையில் புகார் அளித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளதாக தகவல்

திருமணம் செய்ய மறுத்த டிவி ஆங்கரை கடத்திய பெண் தொழிலதிபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

தொலைக்காட்சியில் பணிபுரியும் ஆங்கரை பெண் தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்வதற்காக கடத்தியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதான் ரம்யா பாண்டியன் ஸ்டைல்.. செம்ம போட்டோஷூட் புகைப்படங்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் ஸ்டைலான போட்டோஷூட் புகைப்படங்களை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து 'இதுதான் ரம்யா பாண்டியன்

கவர்ச்சி போட்டோ போட்டால் படுக்க அழைப்பீர்களா? கமல், விக்ரம் பட நடிகை ஆவேசம்..!

கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் அதற்காக எங்களை படுக்கைக்கு அழைப்பீர்களா? என கமல் மற்றும் விக்ரம் படங்களில் நடித்த நடிகை ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இனிமேல் என்னை தேடி நீங்க வரவேண்டாம்.. உங்களை தேடி நான் வர்றேன்: ராகவா லாரன்ஸ்..!

இனிமேல் ரசிகர்கள் என்னை தேடி வர வேண்டாம் என்றும் ரசிகர்களை தேடி நானே வருகிறேன் என்றும் கூறியுள்ள நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ், முதல் கட்ட சந்திப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.