சிங்களுக்கும் கொரோனா பாதிப்பா??? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸின் மரபணுவில் வளர்ச்சிதை மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக என விஞ்ஞானிகள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்து இருப்பதோடு மனிதர்களைத் தவிர்த்து நாய், பூனை, புலி போன்ற விலங்கினங்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் விலங்குகளைத் தாக்கும் கொரோனா வைரஸ் இதுவரை அவைகளுக்கு பெரிய அளவிலான உடல் பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதிதாக 4 சிங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நகர்ப் பகுதியில் இயங்கும் ஹட்டலன் எனும் உயிரியியல் பூங்காவில் உள்ள 4 சிங்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சிங்களுக்கு ஏற்பட்ட சுவாசப் பிரச்சனையைத் தொடர்ந்து அவைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதாகக் கூறப்படுகிறது. பரிசோதனையில் 16 வயது நிரம்பிய 3 பெண் சிங்கங்கள் மற்றும் 4 வயதான 1 ஆண் சிங்கத்திற்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து கொரோனா பாதித்த சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விலங்குகள் நல அமைப்புக்குத் தகவல் கொடுக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது. முன்னதாக பூனை, நாய் போன்ற வளர்ப்பு மிருகங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மனிதர்களிடம் இருந்துதான் கொரோனா வைரஸ் விலங்குகளை பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.
மேலும் இப்படி விலங்குகளைத் தாக்கும் கொரோனா வைரஸ் அவைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றும் தெளிவுப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் அடுக்கடுக்காக பூனை, நாய், கீரி, புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை அடுத்து இன்னும் கொரோனா வைரஸ் மரபணு குறித்து மேலும் அதிகமான ஆய்வுகள் தேவை என்பதை விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout