இளம் ஹீரோவின் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் இளம் ஹீரோவின் அடுத்த திரைப்படத்தில் நான்கு நாயகிகள் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூதுகவ்வும், தெகிடி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் அசோக்செல்வன் என்பதும் இவர் நடித்த ’ஓ மை கடவுளே’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. சமீபத்தில் வெளியான ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அசோக்செல்வன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இரா. கார்த்திக் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அசோக் செல்வன், ரிதுவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் ஸ்வேதா ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தை வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வரும் 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் 4 ஹீரோயின்கள் நடித்து வரும் நிலையில் தற்போது அசோக் செல்வனின் அடுத்த படத்திலும் 4 ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
A super interesting project I’m very excited about :) stay tuned! @Rkarthik_dir @riturv @Aparnabala2 @ShivathmikaR @vidhu_ayyanna @george_dop @riseeastcre @Viacom18Studios @GopiSundarOffl pic.twitter.com/AhCrbXUvqM
— Ashok Selvan (@AshokSelvan) February 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com