தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ரஜினி நிதியுதவியை வாங்க மறுத்த 4 குடும்பத்தினர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துகுடியில் ந்டைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் 100வது நாள் போராட்ட தினத்தில் வன்முறை வெடித்து இதன் காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர்
இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினர்களுக்கும் தமிழக அரசு மற்றும் ஒருசில அரசியல் கட்சிகள் நிவாரண உதவியை அறிவித்தது.
இந்த நிலையில் சமீபத்தில் தூத்துகுடி சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ10ஆயிரமும் நிவாரண உதவி வழங்கினார். ஆனால் ரஜினியின் நிதியுதவியை நான்கு குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த குடும்பத்தினர் அரசு கொடுத்த நிவாரண உதவி உள்பட எந்த நிதியுதவியையும் பெற்று கொள்ள மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நான்கு குடும்பத்தினர்களுக்கு தேவைப்படும் உதவிகளை எப்போது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் கூறியதாக தூத்துகுடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments