தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ரஜினி நிதியுதவியை வாங்க மறுத்த 4 குடும்பத்தினர்

  • IndiaGlitz, [Saturday,June 02 2018]

தூத்துகுடியில் ந்டைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் 100வது நாள் போராட்ட தினத்தில் வன்முறை வெடித்து இதன் காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர்

இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினர்களுக்கும் தமிழக அரசு மற்றும் ஒருசில அரசியல் கட்சிகள் நிவாரண உதவியை அறிவித்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தூத்துகுடி சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ10ஆயிரமும் நிவாரண உதவி வழங்கினார். ஆனால் ரஜினியின் நிதியுதவியை நான்கு குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த குடும்பத்தினர் அரசு கொடுத்த நிவாரண உதவி உள்பட எந்த நிதியுதவியையும் பெற்று கொள்ள மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நான்கு குடும்பத்தினர்களுக்கு தேவைப்படும் உதவிகளை எப்போது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் கூறியதாக தூத்துகுடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

More News

சென்னையில் மேலும் ஒரு காவலர் தற்கொலை

சமீபகாலமாக காவல் துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

கார் விபத்தில் சிக்கிய நடிகை! குடித்துவிட்டு ஓட்டினாரா?

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டான்சராகவும், ஒருசில படங்கள் மற்றும் சீரியகளில் நடித்தவருமான நடிகை சுனிதா சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது

ஒரு முதல்வரிடம் எதிர்பார்ப்பதை ரஜினியிடம் எதிர்பார்ப்பது சரியா? கருணாகரன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தூத்துகுடி மற்றும் சென்னையில் செய்தியாளர்களை

இசைஞானிக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஜனாதிபதி

இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை நேரிலும் தொலைபேசியிலும்