மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனை: 4 உயிர்கள் பலியான பரிதாபம்!

  • IndiaGlitz, [Tuesday,February 04 2020]

மாமியார் மருமகள் இடையே கோலம் போடுவதில் ஏற்பட்ட சிறு சண்டை காரணமாக நான்கு உயிர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் ராணிப்பேட்டை அருகே நடந்துள்ளது

ராணிப்பேட்டையை அடுத்த சோளிங்கர் என்ற பகுதியை சேர்ந்தவ வெங்கடேஷ் என்பவருக்கும் நிர்மலா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்

வெங்கடேஷ் கொடைக்கானலில் வேலை செய்ததால் நிர்மலா தனது மாமனார் மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நிர்மலாவின் மாமியார் நிர்மலா போட்ட கோலத்தை அழித்து விட்டு தனியாக ஒரு கோலம் போட்டதாக தெரிகிறது. இதனை நிர்மலா தனது மாமியாரிடம் தட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே கடும் சண்டை மூண்டு ஒருவரை ஒருவர் திட்டி உள்ளனர்

இந்த நிலையில் கோலம் விவகாரத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிர்மலா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து கொடைக்கானலில் இருந்து வந்த வெங்கடேஷ், தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேகமாக காரில் சென்று விட்டார். அவர் மருத்துவமனையில் இருக்கும் நிர்மலாவின் உடலை பார்க்கத்தான் செல்வதாக அனைவரும் கருதினர்

ஆனால் திடீரென ரயில் முன் பாய்ந்து வெங்கடேஷ் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ரயில் தண்டவாளம் அருகே இருந்த மூன்று உடல்களையும் கைப்பற்றிய போலீசார் காரில் செல்லும் போது தற்செயலாக நடந்த விபத்து அல்லது தற்கொலை முயற்சியா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்

வீட்டு வாசலில் கோலம் போடும் ஒரு சிறு பிரச்சனையால் ஒரு குடும்பத்தின் நான்கு உயிர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

நடிகர் யோகிபாபுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் 'காக்டெயில்' என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த போஸ்டருக்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது தெரிந்ததே

எல்.ஐ.சி பங்குகள் விற்கப்படுவது சாதாரண விஷயமல்ல.. மக்களின் பணத்தில் கை வைக்கிறது இந்த அரசு..! விவரிக்கும் ஊழியர்கள்.

"எங்களுக்குப் பிரச்னை வந்துவிடும் என்பது போல சொல்லப்படுகிறது. எங்களுக்கு எப்படியும் சம்பளம் வரத்தான் போகிறது. ஆனால், மக்கள் இந்த நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிதைந்துவிடும்".

தஞ்சை பெரிய கோவில் - ஆற்றங்கரை நாகரிகத்தின் வரலாற்றுச் சிறப்பு

வண்டல் மண்ணைத் தவிர சுற்றி வேறு எதையுமே காண முடியாத ஒரு ஊரில் இத்தனை பெரிய பிரம்மாண்டம்

பழைய தேர்வு முறையே தொடரும்.. 5ம் மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து..! தமிழக அரசு அறிவிப்பு.

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் தான தெரியும்.. பாக்ஸர் ஜெயக்குமார் தெரியுமா..?! வீடியோல பாருங்க.

அமைச்சர் ஜெயக்குமார் ஒயிட் அண்ட் ஒயிட் வேட்டி சட்டையில், கையில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு பாக்ஸிங் செய்து கலக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.