மத்திய அரசின் 4 இணையத்ளங்கள் முடக்கம். சீனர்கள் கைவரிசையா?

  • IndiaGlitz, [Friday,April 06 2018]

மத்திய அரசின் முக்கிய நான்கு இணையதளங்கள் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்னர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டு அதில் சீன எழுத்துக்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு அந்த இணையதளத்தை மீட்டெடுக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் பாதுகாப்புத்துறை இணையதளத்தை தொடர்ந்து அடுத்தடுத்து உள்துறை, தொழிலாளர் நலத் துறை, சட்டம் மற்றும் நீதித் துறை இணையதளங்களும் முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முடக்கட்டப்பட்ட அனைத்து இணையதளங்களிலும் சீன எழுத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் இணையதளங்களுக்கே இந்த நிலை என்றால் இந்தியர்களின் ஆதார் தகவல்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ஆதார் தகவல்கள் அனைத்தும் 5-அடி கனமான சுவர்களுக்குள் பாதுகாப்பாக உள்ளதாக அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.