ஒரே படத்தில் 4 பிக்பாஸ் தமிழ் பிரபலங்கள்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!

  • IndiaGlitz, [Thursday,September 14 2023]

ஒரே படத்தில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான்கு போட்டியாளர்கள் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து பட குழுவினர் கேக் வைத்து கொண்டாடியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன் முடிவடைந்து தற்போது 7வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் இந்த ஆறு சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஜி பி முத்து, அனிதா சம்பத், ராபர்ட் மாஸ்டர் ஆகிய நான்கு போட்டியாளர்கள் நடித்துள்ள படம் ’ரெட் அண்ட் பாலோ’.

வணக்கம் தமிழா சாதிக் இயக்கி உள்ள இந்த படத்தில் கருணாகரன், பால சரவணன், அஜய் வாண்டையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேண்டஸி காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் கதையை பாபு தமிழ் எழுதியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஒரே படத்தில் 4 பிக் பாஸ் பிரபலங்கள் நடித்த படம் என்பதால் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.