கொரோனா பயத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!
- IndiaGlitz, [Monday,March 23 2020]
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மனித இனத்தையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் இந்த வைரஸால் ஆயிரக்கணக்கான உயிர்களும் பலியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். இதுவரை அதிகாரபூர்வமாக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சிலர் கொரோனா வைரஸை மூலிகை மருந்து கட்டுப்படுத்தும் என்று கூறி வருகின்றனர்
இந்த நிலையில் உசிலம்பட்டியில் கொரோனா வைரஸ் தங்களுக்கு பரவியிருக்கலாம் என்ற பயத்தில் நான்கு பேர் மூலிகை மருந்தை சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்கள் 4 பேருக்கும் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து அவர்களுடைய உறவினர்கள் உடனடியாக நான்கு பேர்களையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரசுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் கொரோனாவை குணப்படுத்தும் என்று கூறும் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நிலவேம்பு குடிநீர் உள்பட சில மூலிகைகள் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்றாலும் அது கொரோனாவை கட்டுப்படுத்தாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது