1979 முதல் சினிமா டிக்கெட்டுக்களை சேகரித்து வைத்துள்ள முதியவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமா என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு பெரிய மோகம் என்றும் தமிழக மக்களின் பொழுது போக்குகளில் மிக முக்கியமானது என்றும் கூறலாம். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 1979ஆம் ஆண்டு முதல் தான் பார்த்த சினிமாக்களின் டிக்கெட்டுக்களை ஆல்பம் போல் சேகரித்து வைத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த குருமூர்த்தி என்ற முதியவர் கடந்த 1975 முதல் தனது பதினைந்தாம் வயதில் இருந்தே சினிமா பார்க்க தொடங்கியதாகவும், அதன் பின்னர் 1979 முதல் 1989 வரை தான் பார்த்த படங்களின் டிக்கெட்டுகளை ஆல்பம் போல் பாதுகாத்து வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு டிக்கெட்டிலும் அவர் பார்த்த படத்தின் பெயர், பார்த்த நேரம் குறித்த தகவலையும் குறிப்பிட்டு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிக்கெட்டுகளின் ஆல்பத்தை பார்த்து திரையரங்கு உரிமையாளர்கள் ஆச்சரியமடைந்து அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தான் சிறுவயதில் இருக்கும்போது திரைப்படம் பார்க்கும் வழக்கம் இருந்ததாகவும் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு கோபம் தீரும் வரை சினிமா பார்த்ததாகவும் ஒரு சில நாட்களில் ஒரேநாளில் 5 காட்சிகள் பார்த்த அனுபவம் தனக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். சினிமா மீது இவருக்கு இருக்கும் மோகம் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments