திருநங்கையாக மாறிய WWE சூப்பர் ஸ்டார்!

  • IndiaGlitz, [Saturday,February 06 2021]

முன்னாள் WWE சூப்பர் ஸ்டார் Gabbi Tuft திருநங்கையாக மாறி உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

WWE சூப்பர் ஸ்டார் Gabbi Tuft என்பவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இவர் தற்போது திருநங்கையாக மாறி உள்ளதாகவும் இதற்காக தான் வெட்கப்படவில்லை என்றும் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் தனது சமூக ஊடகத்தில் நீண்ட விளக்கம் அளித்தபோது ’கடந்த எட்டு மாதங்கள் எனது வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான காலமாக இருந்தது. ஒரு திருநங்கை உலகில் எதிர்கொள்ளவேண்டிய உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எப்படி இருக்கும் என்பதை நான் அறிந்து கொண்டேன். இருப்பினும் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், பேசுகிறார்கள் என்பதை கவனிப்பதை நான் நிறுத்திய நாள் தான் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியான நாளாக அமைந்தது.

எனது அன்பான மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் என்னை நன்றாக புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு எனது நன்றி. நான் என்றென்றும் அனைவருக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன்’ என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த உருக்கமான பதிவு தற்போது வைரலாகி வருகிறது