பத்ம விருதை நிராகரித்த மூத்தத் தலைவர்… யார் இந்த புத்தத்தேவ் தாக்கரே?

  • IndiaGlitz, [Thursday,January 27 2022]

இந்தியாவில் கலை, இலக்கியம், மருத்துவம், சமூகச்சேவை எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளில் ஏதேனும் ஒன்று வழங்கிக் கவுரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டிற்கான பத்ம விருதுகளைப் பெறும் நபர்களின் பெயர் பட்டியல் குடியரசு தினத்தன்று வெளியிடப்பட்டது.

மேலும் பத்ம விருதுகளை அறிவிப்பதற்கு முன்பே அதைப்பெறும் நபர்களிடம் இருந்து ஒப்புதலும் பெறப்பட்டு இருக்கும் ஆனால் விருது அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தனக்கு வழங்கப்பட இருந்த பத்ம பூஷன் விருதை முன்னாள் மேற்குவங்க முதல்வர் புத்தத்தேவ் தாக்கரே நிராகரித்துவிட்டார். இது ஒட்டுமொத்த இந்தியாவில் கடும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதற்குமுன்பு ஒருசில காரணங்களால் பத்மவிருதுகளைப் பெற்ற பிரபலங்கள் தங்களது விருதுகளைத் திரும்பி அளித்த நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன.

அந்த வகையில் திரைப்பட எழுத்தாளரான சலீம்கான் கடந்த 2015 ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட இருந்த பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்துவிட்டார். அதேபோல வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ரொமிலா தாப்பர் தனக்கு 1974 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதைக் கடந்த 1984இல் இந்திய ராணுவத்தினர் பொற்கோவிலை முற்றுகையிட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரும்ப அளித்துவிட்டார்.

இதே காரணத்திற்காக மூத்தத்தலைவர் குஷ்வந்த் சிங் தனக்கு 1974 இல் வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை 1984இல் திருப்பி அளித்தார். மேலும் இவர் 2007 இல் வழங்கப்பட இருந்த பத்ம விபூஷன் விருதையும் ஏற்க மறுத்துவிட்டார். ரொமிலா தாப்பரும் தனக்கு 2005இல் வழங்கப்பட இருந்த பத்மபூஷன் விருதை நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பத்ம விருதுபட்டியலில் 128 பேர் இடம்பெற்றிருந்தனர். அதில் மறைந்த முப்படைத்தளபதி பிபின் ராவத் உட்பட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல தமிழக எழுத்தாளரான சிற்பி பாலச்சுப்பிரமணியம், சவுகார் ஜானகி, சுந்தர்பிச்சை உட்பட 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் காங்கிரஸ் மூத்தத்தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் மேற்குவங்க முதல்வர் புத்தத்தேவ் பட்டார்ச்சார்யா என 17 பேருக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான குலாம்நபி ஆசாத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்து வருகிறார். அதேநேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யா நேரடியாக பாஜகவையும் பிரதமரையும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இவர்கள் இருவருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு அதில் புத்தத்தேவ் தனது விருதை மறுத்துள்ளார். இவர் மேற்கு வங்கத்தின் முதல்வராக கடந்த 2000-2011 வரை பதவிவகித்தார்.

இந்நிலையில் தற்போது 77 வயதான அவர் இதயம், நுரையீரல் போன்ற பிரச்சனை மற்றும் வயது மூப்பு காரணமாக அண்மைகாலமாக அரசியல் நிகழ்வுகள் எதிலும் பங்கு கொள்ளாமல் இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

திருமணம் செய்யாத மகனால் தற்கொலைக்கு முயன்ற தந்தை... தடம் மாறுகிறதா இளையச் சமூகம்?

சீனாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் திருமணம் செய்துகொள்ளாத

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': பிரியங்கா மோகன் கேரக்டர் குறித்து  இயக்குனர் பாண்டிராஜ்

சூர்யா நடித்து முடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி பிரியங்கா மோகனின் கேரக்டர் உள்பட ஒருசில முக்கிய

சிவகார்த்திகேயனின் 'டான்' ரிலீஸ் தேதி இதுவா?

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்வில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவை அடுத்து ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் பிரபல நடிகர் தனுஷ் சமீபத்தில் பிரிவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்துக்கு இதுகுறித்து எடுத்துள்ள முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி யோகா: வரலட்சுமியின் வைரல் வீடியோ!

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.