வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் எவர்டன் வீக்ஸ் காலமானார்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான சர் எவர்டன் வீக்ஸ் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 95 என்பதும் குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் மிகவும் குறிப்பிடத் தக்கவராக விளங்கிய இவர் 22 வயதில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். 1948 ஆம் ஆண்டிலேயே கிரிக்கெட் விளையாட்டுகளில் பங்கு கொள்ளவும் ஆரம்பித்து இருக்கிறார். 48 டெஸ்ட் போட்டிகளில் 4455 ரன்களை குவித்து இருக்கிறார். இவருடைய சராசரி ரன் ரேட்டிங் 58-61 ஆக இருந்தது.
மேலும் 5 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி 5 சதத்தை அடித்து உலகச் சாதனை படைத்து இருக்கிறார். அதிக ரன் ரேட்டிங்க் கொண்ட சிறந்த 10 பேட்ஸ் மேன்களில் இவர் 5 ஆவதாக இருக்கிறார். 152 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 12,010 ரன்கள் எடுத்துள்ளார். அந்தப் போட்டிகளில் இவருடைய ரன் ரேட்டிங்க் 55-34 ஆக இருந்தது. அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 304 ரன்கள் வரை எடுத்து சாதனை படைத்து உள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் விலக்க முடியாத சாதனைகளை படைத்த சர் எவர்டன் வீக்ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக புகழப்படும் வீரராகவும் இருந்து வருகிறார். வயது முதிர்வ காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் முதற்கொண்டு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் தற்பாது இரங்கல் தெரிவித்து வருகின்றர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments