வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் எவர்டன் வீக்ஸ் காலமானார்!!!

 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான சர் எவர்டன் வீக்ஸ் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 95 என்பதும் குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் மிகவும் குறிப்பிடத் தக்கவராக விளங்கிய இவர் 22 வயதில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். 1948 ஆம் ஆண்டிலேயே கிரிக்கெட் விளையாட்டுகளில் பங்கு கொள்ளவும் ஆரம்பித்து இருக்கிறார். 48 டெஸ்ட் போட்டிகளில் 4455 ரன்களை குவித்து இருக்கிறார். இவருடைய சராசரி ரன் ரேட்டிங் 58-61 ஆக இருந்தது.

மேலும் 5 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி 5 சதத்தை அடித்து உலகச் சாதனை படைத்து இருக்கிறார். அதிக ரன் ரேட்டிங்க் கொண்ட சிறந்த 10 பேட்ஸ் மேன்களில் இவர் 5 ஆவதாக இருக்கிறார். 152 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 12,010 ரன்கள் எடுத்துள்ளார். அந்தப் போட்டிகளில் இவருடைய ரன் ரேட்டிங்க் 55-34 ஆக இருந்தது. அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 304 ரன்கள் வரை எடுத்து சாதனை படைத்து உள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் விலக்க முடியாத சாதனைகளை படைத்த சர் எவர்டன் வீக்ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக புகழப்படும் வீரராகவும் இருந்து வருகிறார். வயது முதிர்வ காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் முதற்கொண்டு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் தற்பாது இரங்கல் தெரிவித்து வருகின்றர்.

More News

அங்க போயுமா??? உயர்சாதி இந்துக்கள் சாதிப்பாகுபாடு காட்டடுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிஸ்கோ சிண்டம்ஸ் இன்க் (CSO.Co) நிறுவனத்தில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அம்மா.. உண்மையை தைரியமா சொல்லும்மா: அதிரடி காட்டிய ரேவதியின் மூத்த மகள்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு பெரும் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு

தலைமை காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் காப்பாற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக சிபிசிஐடி இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்

பிக்பாஸ் ஜூலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா?

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பகுதியில் ஜல்லிக்கட்டு போராட்ட வீராங்கனை ஜூலி பங்கேற்றிருந்தார் என்பது தெரிந்ததே. ஆரம்பத்தில் சில வாரங்கள் ஜூலிக்கு ரசிகர்கள்

சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்: அப்ரூவராக மாறும் அதிகாரிகள்

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை