முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் காலமானார்

  • IndiaGlitz, [Saturday,December 01 2018]

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 94.

அமெரிக்காவின் 41வது அதிபரான ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்  கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானதாக அவ்ருடைய குடும்பத்தினர் டுவிட்டர் மூலம் உறுதி செய்துள்ளனர்.

கடந்த 1924ஆம் ஆண்டு ஜுன் 12ஆம் தேதி பிறந்த ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர், இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்றுள்ளார். மறைந்த ஜார்ஜ் புஷ் அவர்களுக்கு ஐந்து குழந்தைகள், 17 பேரக்குழந்தைகள் உள்ளனர். இவருடைய மகன் புஷ் அமெரிக்காவின் 43வது அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் மனைவி பார்பரா புஷ் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார் என்பதும், அவர் காலமான சில நாட்களில் புஷ் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஜீவா-அருள்நிதி இணையும் புதிய படத்தில் பிரபல நாயகி

கோலிவுட் திரையுலகில் இரண்டு ஹீரோக்கள் படங்கள் அரிதாகவே வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இளம் நாயகர்களான ஜீவா மற்றும் அருள்நிதி ஒரே படத்தில் இணையவுள்ளனர்.

நல்ல சோறு போட்டவர்களுக்கு புழுத்து போன அரிசியா? கமல் காட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட நடிகர், அரசியல்வாதி கமல் நேற்று இரண்டாம் முறையாக டெல்டா பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

'நீங்க அடுத்த சி.எம்-க்கு வண்டி ஓட்றீங்க: கமல் சென்ற பேருந்தில் கலகல...

மக்கள் நீதி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று இரண்டாவது முறையாக டெல்டா பகுதிகளுக்கு நேரில் சென்று கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்

அஜித்தை பார்க்க குவிந்த ரசிகர்கள்: போலீசார் தடியடியால் பரபரப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் 'தக்சா' என்ற அமைப்பு ஆளில்லா விமானம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது என்பதும் இந்த அமைப்புக்கு தல அஜித் ஆலோசகராகவும் உள்ளார்

'இந்தியன் 2' நாயகியாகும் அஜித்-விஜய் பட நடிகை

ஷங்கர் இயக்கத்தில் நேற்று வெளியான '2.0' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 முதல் தொடங்கவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்