பிரபல நடிகரின் கட்சியில் இணைந்த தமிழக முன்னாள் தலைமை செயலாளர்

  • IndiaGlitz, [Monday,February 11 2019]

தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளராக பணியாற்றிய ராம்மோகன் ராவ், பிரபல தெலுங்கு நடிகரின் கட்சியில் இணைந்துள்ளார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்தவர் ராம மோகன ராவ். ஜெயலலிதா மறைந்த பின்னர் இவர் மீது சர்ச்சைக்குரிய புகார்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தலைமைச்செயலாளராக இவர் பணிபுரிந்தபோதே இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் நடத்தி வரும் ஜன சேனா கட்சியில் ராம மோகன ராவ் இன்று இணைந்துள்ளார். அவர் அக்கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 

More News

தேர்தல் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபல நடிகர்!

பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் ரிலிசுக்கு தயாராகி ஒருசில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக இந்த படம் காத்திருந்தது

உலகின் முதல்  4K HDR டிரைலரை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்

'மூடர் கூடம்' படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் நடித்து இயக்கியிருக்கும் அடுத்த படமான 'அலாவுதினின் அற்புத விளக்கு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்

சூர்யாவின் 'காப்பான்' ரிலீஸ் குறித்த தகவல்

சூர்யா நடித்து வரும் 'என்.ஜி.கே. திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் படமான 'காப்பான்'

'பொதுநலன் கருதி' இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு கருணாகரன் விளக்கம்

சமீபத்தில் வெளியான 'பொதுநலன் கருதி' திரைப்படத்தின் இயக்குனர் சீயோன், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த கருணாகரன், தனக்கும் தயாரிப்பாளருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாக

தேர்தலில் போட்டியிட விரும்பும் மறைந்த சூப்பர் ஸ்டாரின் மனைவி

கன்னட சூப்பர் ஸ்டார் அம்பரீஷ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். நடிகராக மட்டுமின்றி அரசியலிலும் ஜொலித்த அம்பரீஷ் கர்நாடக மாநிலத்தில்