அர்ச்சனாவுக்கு ஆதரவு கொடுத்த முன்னாள் டைட்டில் வின்னர்.. இனிமேல் அவரது ஆர்மி பாத்துக்குவாங்க..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் போட்டியாளர்கள் 18 பேரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கினார் என்பதும் தெரிந்ததே.
ஆனால் ஒரு கட்டத்தில் பிரதீப் ஆண்டனி எல்லோரையும் விட முந்துவதை பார்த்து பொறுக்க முடியாத சிலர் கூட்டணி அமைத்துக் கொண்டு அவரை சதி செய்து வெளியேற்றி விட்டனர். இந்த சதியில் கமல்ஹாசனும் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிவிட்டதாக பலரது குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில் பிரதீப்பை வெளியேற்றிவிட்டால் நாம தான் கிங் என்று நினைத்துக் கொண்டிருந்த மாயா - பூர்ணிமா கேங்கிற்கு தற்போது சிம்ம சொப்பனமாக இருப்பது அர்ச்சனா மற்றும் விசித்ரா என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாயா பூர்ணிமா கேங்கிற்கு அர்ச்சனா பதிலடி கொடுத்து திணறடித்து வருகிறார்
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அர்ச்சனாவுக்கு ஆதரவு குவிந்து கொண்டே வருகிறது. முதல் ஒரு சில நாட்கள் அழுது கொண்டே இருந்தவரா இப்படி சிம்ம சொப்பனமாக மாறி உள்ளார்? என்றும் சிங்கப்பெண் என்றும் அர்ச்சனாவை புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் டைட்டில் வின்னர் ஆரி தனது சமூக வலைத்தளத்தில் அர்ச்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ’அர்ச்சனா நீங்கள் கேமை மிகச் சரியாக தொடங்கி இருக்கிறீர்கள், வலிமையாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளதை அடுத்து இனி ஆரி ஆர்மி அவருக்கு சப்போர்ட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Archana you begin the game stay strong 💪 #BigBoss7tamil #VJArchana
— Aari Arujunan (@Aariarujunan) November 7, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com