இவங்களாலதான எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கல… மனம் திறந்த முன்னாள் தமிழக பேட்ஸ்மேன்!!!

தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமானவர் சுப்ரமணியம் பத்ரிநாத். இவர் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த நிலையில்தான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இந்திய அணியில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப் பட்ட நேரத்தில் இந்திய அணியில் இருந்தே ஒதுக்கப்படும் வீரராக மாறிப்போனார். இதற்கு காரணம் என்ன என்பதைக் குறித்து தற்போது அவரே கருத்துத் தெரிவித்து உள்ளார்.

நான் இந்திய அணியில் அறிமுகமான நேரத்தில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விரேந்திரசிங் டோனி, கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் என பலம் வாய்ந்த ஆட்டக்காரர்கள் இருந்தனர். என்னால் இவர்களை வீழ்த்தி விட்டு முன்னுக்கு வர இயலவில்லை. ஒருவேளை ஆல்ரவுண்டராக இருந்திருந்தால் 6 ஆவது அல்லது 7 ஆவது ஆட்டக்காரராக இந்திய அணியில் நிலைத்து இருப்பேன். ஆனால் முடியவில்லை. அணியில் நிலைக்க வேண்டும் என்பதற்காக என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்தேன். சுழல் பந்தையும் வீசக் கற்றுக்கொண்டேன். ஆனால் அணியில் எனக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து உள்ளார்.

இவர் தனது தொடக்க டெஸ்ட் போட்டியிலேயே அரைச் சதத்தையும் எடுத்து இருந்தார். இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் டி 20 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடவும் செய்தார். தனது முதல் டி 20 போட்டியில் 43 ரன்களைக் குவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 95 டி 20 போட்டிகளில் 1441 ரன்களைக் குவித்து 30.66 சராசரிகளை வைத்து இருந்த சமயத்தில் டி 20 போட்டிகளில் இருந்தும் இவர் ஒதுக்கப் பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 ஆம் ஆண்டில் இவர் அணியில் இருந்து விலக்கப் பட்டபோது இவருக்கு பதிலாக வந்தவர்தான் விராட் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.