மிடாஸ் நிறுவனத்தை நடத்துபவர் எப்படி பொதுச்செயலாளர் ஆகலாம்? பி.எச்.பாண்டியன் கேள்வி
- IndiaGlitz, [Wednesday,February 08 2017]
தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நேற்றிரவு முதல் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மாபெரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது அதிமுக கட்சியினர்களும், நிர்வாகிகளும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் ஆகியோர்கள் தற்போது வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் உடன் உள்ளனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியபோது, 'எம்எல்ஏக்களை தொந்தரவு செய்யக்கூடாது. தமிழகத்தில் நல்லாட்சி அமைவதை தடுக்கக்கூடாது' என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் சசிகலா குடும்பத்தினருக்கு பணமே பிரதான குறிக்கோளாக இருப்பதாகவும் மிடாஸ் நிறுவனத்தையும் நடத்திக்கொண்டு பொதுச்செயலாளராகவும் சசிகலா எப்படி இருக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.