சசிகுமாரின் அடுத்த படத்தில் நிஜ கைதிகள்: பரபரப்பான தகவல்

  • IndiaGlitz, [Thursday,December 17 2020]

பிரபல நடிகர், இயக்குனர் சசிகுமார் நடிக்கவிருக்கும் ’பகைவனுக்கு அருள்வாய்’ என்ற திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் இந்த படத்தை ’திருமணம் என்னும் நிக்கா’ என்ற படத்தை இயக்கிய அனிஸ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

சமூக கருத்துடன் கூடிய த்ரில்லர் திரைப்படமான இந்த படத்தில் நாயகிகளாக வாணிபோஜன் மற்றும் பிந்து மாதவி நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் பாரதியாரின் கவிதைகளில் இருந்து எடுத்ததாக இயக்குனர் அனீஸ் கூறினார். பாரதியாரின் கவிதைகளில் உள்ள இந்த வார்த்தைகள் கொண்ட டைட்டில் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’லூசியா’ படத்தில் நடித்த சதீஷ் நடிக்கவிருப்பதாகவும், மேலும் நாசர், ஜெயப்பிரகாஷ் உட்பட ஒரு சில முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும் இந்த படம் கைதிகள் குறித்த கதையம்சம் கொண்டது என்பதால் உண்மையான கைதிகளை நடிக்கவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஏற்கனவே கைதிகளாக இருந்து விடுதலையான சிலரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

'தளபதி 65' படத்தின் கதை, சிம்பு டிராப் செய்த படமா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படமான 'தளபதி 65' திரைப்படத்தை இயக்க இருப்பது நெல்சன் என்று அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

மிஷ்கின் படத்தில் பிசாசாக நடிக்கும் பிரபல நடிகை!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'பிசாசு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது 6 வருடங்கள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை

கெளதம் கார்த்திக்கிடம் செல்போனை பறித்தது 17 வயது சிறுவனா?

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் இடம் கடந்த 2ஆம் தேதி ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் மர்ம நபர்கள் இருவர் செல்போனை பறித்து சென்றனர்

அலைக்குப் பதிலாக நுரையால் மூடப்பட்ட கடல்… விசித்திரத்திற்குள் இன்னொரு விசித்திரம்!!!

டிவிட்டரில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் நுரைப் பொங்கும் கடலுக்கு நடுவில் ஒரு குடும்பமே சேர்ந்து எதையோ தேடுகிறது.

டைனோசர் 2 கால்களுடன் இறகுகூட வைத்திருக்குமா??? புதுவகை உயிரினத்தின் படிமம்!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரேசில் நாட்டின் பழங்கால நீர்நிலை ஒன்றில் இருந்து ஒரு சிறிய வகை டைனோசரின்