close
Choose your channels

கார்த்தியின் அடுத்த படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கேரக்டரா? ஆச்சரிய தகவல்..!

Wednesday, September 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கேரக்டர் இருப்பதாக கூறப்படுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்தியுடன் எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ’சர்தார்’ இரண்டாம் பாகத்தில் கார்த்தி அப்பா கேரக்டரின் பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெறுவதாகவும் இந்த காட்சியின் காலகட்டத்தில் இந்திரா காந்தி தான் பிரதமராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்திரா காந்தி கேரக்டர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அவரது தோற்றம் போல் உள்ள ஒரு ஆங்கிலோ இந்திய பெண் ஒருவரை இந்திரா காந்தி கேரக்டரில் நடிக்க வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் கார்த்தி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment