கார்த்தியின் அடுத்த படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கேரக்டரா? ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,September 04 2024]

கார்த்தி நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கேரக்டர் இருப்பதாக கூறப்படுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்தியுடன் எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ’சர்தார்’ இரண்டாம் பாகத்தில் கார்த்தி அப்பா கேரக்டரின் பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெறுவதாகவும் இந்த காட்சியின் காலகட்டத்தில் இந்திரா காந்தி தான் பிரதமராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்திரா காந்தி கேரக்டர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அவரது தோற்றம் போல் உள்ள ஒரு ஆங்கிலோ இந்திய பெண் ஒருவரை இந்திரா காந்தி கேரக்டரில் நடிக்க வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் கார்த்தி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

இது வேற லெவல் ட்விஸ்ட்.. 'கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் நடித்துள்ள நிலையில் தற்போது சிஎஸ்கே வீரரும் ஒரு சின்ன கேரக்டரில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார்

'கூலி' படத்தின் ரஜினி போஸ்டரில் உள்ள 1421 எண்ணிற்கு இதுதான் அர்த்தமா? பரபரப்பு தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு

இதுமட்டும் உண்மையானால் தமிழக முதல்வரின் 'கோட்' நகர்வாக இருக்கும்: வெங்கட் பிரபு

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ள நிலையில் தனது சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து இது மட்டும் உண்மையாக

விநாயகர் சதுர்த்தி 2024: தேதி, பூஜை நேரம், வழிபடும் முறை என்ன?

பிரபல ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், வரும் விநாயகர் சதுர்த்தியை எப்படி சிறப்பாக கொண்டாடலாம் என்பது பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

நடிகர், நடிகைகள், காதல் ஜோடி, தம்பதி.. களை கட்டுகிறது பிக்பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு வருடங்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில் எட்டாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.