லைகாவின் அடுத்த படம்.. பூஜை விழாவுக்கு வந்த முன்னாள் பிரதமர், முன்னாள் முதல்வர்..!

  • IndiaGlitz, [Thursday,August 24 2023]

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில், இந்த பூஜையில் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழில் பல வெற்றி படங்களை தயாரித்த லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் முதன்முதலாக ஒரு கன்னட திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்த பூஜையில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரண் அவர்களும் கலந்து கொண்டார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் 28 வது படமான இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் நிகில் குமார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லட்சுமண் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ’ரோமியோ ஜூலியட்’ மற்றும் ’போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

More News

'தளபதி 68' படத்தில் இணைகிறாரா 'பீஸ்ட்' நடிகை?  இன்னும் யார் யாரெல்லாம் நடிக்குறாங்க?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படத்தின் செய்திகள் அவ்வப்போது கசிந்து வருகின்றன

சந்திரனில் வெற்றி, சதுரங்கத்தில் தோல்வி.. உலககோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா போராடி தோல்வி..!

கடந்த சில நாட்களாக உலக கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இதன் இறுதிப் போட்டி சமீபத்தில் தொடங்கியது என்பதும் இதில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன்

கவர்னர் கையால் டாக்டர் பட்டம் பெற்ற இளம் இசையமைப்பாளர்.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் திரை உலகின் இளம் இசையமைப்பாளர் இன்று, கவர்னர் ஆர்.என் ரவி கையால் டாக்டர் பட்டம் பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பெசன்ட் நகர் பீச்சில் சண்டை போட்ட இருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களா? டிஆர்பி எகிறும் என தகவல்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்த மாதம் முதல் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் திருமணத்தன்று லாஸ்லியா போட்ட பதிவு.. பதிலடி கொடுத்த மோனிகா..!

நடிகர் கவின் சமீபத்தில் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்தன்று பிக்பாஸ் லாஸ்லியா செய்த பதிவுக்கு தற்போது மோனிகா பதிலடி கொடுக்கும்