லைகாவின் அடுத்த படம்.. பூஜை விழாவுக்கு வந்த முன்னாள் பிரதமர், முன்னாள் முதல்வர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில், இந்த பூஜையில் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தமிழில் பல வெற்றி படங்களை தயாரித்த லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் முதன்முதலாக ஒரு கன்னட திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்த பூஜையில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரண் அவர்களும் கலந்து கொண்டார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் 28 வது படமான இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் நிகில் குமார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லட்சுமண் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ’ரோமியோ ஜூலியட்’ மற்றும் ’போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
Pooja stills from the auspicious ceremony 🪔🌸 of our first Kannada film graced by former Prime Minister of India 🇮🇳 honourable @H_D_Devegowda sir and former Chief Minister of Karnataka honourable @hd_kumaraswamy sir. 🙏🏻🎬✨
— Lyca Productions (@LycaProductions) August 24, 2023
Lyca's #ProductionNo28 🎬✨ @Nikhil_Kumar_k… pic.twitter.com/Ju0yfJCoWQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com