முதல்வர்களை அடுத்து 'ஜெயிலர்' பார்த்த சர்வதேச தலைவர்..! வீடியோ வைரல்..!
- IndiaGlitz, [Monday,August 14 2023]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் நான்கே நாட்களில் சுமார் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பார்த்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ‘ஜெயிலர்’ படம் பார்த்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது மங்கோலியா நாட்டின் முன்னாள் அதிபர் சமீபத்தில் பெங்களூர் வந்த நிலையில் அவர் ‘ஜெயிலர்’ படத்தை பார்த்தார். அப்போது அவர் கூறியபோது ’மங்கோலியர்களுக்கு இந்திய திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும், குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் என்றால் நாங்கள் விரும்பி பார்ப்போம்’ என்று கூறினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Former President of Mongolia #NambarynEnkhbayar watches superstar #Jailer in Bangalore
— Venkatesh (@venkatavmedia) August 14, 2023
An AV Media Consultancy Release in Karnataka Thru Jayanna Films@rajinikanth @sunpictures @Nelsondilpkumar @anirudhofficial @NimmaShivanna @Bangalore_RFC @imravee @RajiniGuruRG… pic.twitter.com/sowwmNXtT3