குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்
- IndiaGlitz, [Monday,August 31 2020]
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84 . கொரோனா தொற்றால், டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜி அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜி அவர்களின் மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அதை அகற்றினர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின் பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது. கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆழ்ந்த கோமா நிலைக்கு பிரணாப் முகர்ஜிக்கு சென்றதாகவும் அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் ஷாக் ஏற்பட்டு உடல் நிலை கடும் பின்னடைவு அடைந்து இருப்பதாக இன்று காலை டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்து இருந்த நிலையில் ஆழ்ந்த கோமா நிலையிலேயே அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.