முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் காலமானார்...!

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

பழனியின், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக இன்று உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில், கடந்த ஆட்சியில் திமுக சார்பாக களமிறங்கி, வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றவர் தான் அன்பழகன். இவருக்கு திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட, பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட, ஆக்சிஜன் அளவும் குறைந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை சிகிச்சை பலனில்லாமல் இவர் உயிரிழந்தார். இவரின் இறப்பிற்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அன்பழகன் பழனியில்,எல்ஐசி வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்தார். 2006-2011 ஆம் கால கட்டத்தில், திமுக ஆட்சியின் போது பழனியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஜகமே தந்திரம்-ஒரு பிரிட்டிஷ் படைப்பு… மனம் திறக்கும் சந்தோஷ் நாராயணன்!

தனுஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய உள்ள “ஜகமே தந்திரம்’‘ திரைப்படம் வரும் ஜுன் 18 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி மறுத்த அமெரிக்கா!

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்காகப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது.

பெண்களை ஆபாசமாக பேசியதாக பிரபல யூடியூபர் மீது கிரைம் போலீசார் வழக்கு!

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளினால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பங்கள் அரங்கேறியது.

லஞ்ச ஒழிப்புத்துறையில் பெண் ஐபிஎஸ் நியமனம்....! நடுங்கும் அரசியல் பிரமுகர்கள்...!

முன்னாள் ஐபிஎஸ்-ஆக இருந்த லட்சுமி அவர்கள், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட உள்ளார்.

நடிகர் பாலசரவணன் வீட்டில் கொரோனாவால் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் திரையுலகைச் சேர்ந்த ஒருசிலரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது