மேலும் ஒரு திமுக பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதி: பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Wednesday,June 17 2020]
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளை கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் 919 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று பாதித்துள்ளது என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,245ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பிற்கு பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் சில அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சமீபத்தில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திமுக பிரமுகருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது.
திமுக இலக்கிய அணி செயலாளர் விபி கலைராஜன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னாள் தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த விபி கலைராஜன், ஜெயலலிதா மறைவிற்குப் பின் டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார். அதன்பின் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த விபி ராஜனுக்கு இலக்கிய அணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ பழனி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.