கமலுக்கு சொந்த புத்தியும் இல்லை, சொல்புத்தியும் இல்லை: அதிமுக மூத்த தலைவர்

  • IndiaGlitz, [Saturday,October 28 2017]

எண்ணூர் துறைமுகத்தில் ஆற்றை வழிமறித்து அரசு நிறுவனங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன் இன்று களப்பணியாக அந்த பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். கமலின் இந்த நேரடி ஆய்வுப்பணிகளை பெரும்பாலான அரசியல்வாதிகளும், சமூக நல ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் கோவை எம்.எல்.ஏவுமான கோவை செல்வராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

அரசு நிறுவனங்கள் அந்த பகுதியில் நியமிக்காவிட்டால் மக்களுக்கு அடிப்படை தேவை எப்படி கிடைக்கும்? மின்சாரம், பெட்ரோல், டீசல் இல்லாமல் 1945ஆம் ஆண்டில் இருந்தது போல் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் இருக்க வேண்டும் என்று கமல் நினைக்கின்றாரா?

எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் அப்பட்டமாக குற்றஞ்சொல்லும் கமலுக்கு சிந்திக்கவோ, செயல்படவோ சக்தி இல்லை என்றும் சொல்புத்தியும் சொந்த புத்தியும் இல்லாதவர் அவர் என்றும் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

More News

கமல் களப்பணி: அரசியல் தலைவர்களின் ரியாக்சன் என்ன?

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை எண்ணூர் துறைமுகத்திற்கு நேரடியாக என்று களப்பணி ஆய்வில் இறங்கியது அப்பகுதி மக்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

களத்தில் இறங்கினார் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் மீது ஒருசில அரசியல்வாதிகள் கூறும் குற்றச்சாட்டு அவர் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்பதுதான்.

5000 பேர்களுக்கு ஒளி கொடுத்தவர் அஜித்: ராதாரவி

ஒருசில ஆயிரங்கள் தானதர்மம் செய்தாலே விளம்பரப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் இந்த காலத்தில் யாருக்குமே தெரியாமல், எந்தவித விளம்பரமும் இல்லாமல் அஜித் செய்த உதவி

சிவாஜி பேரனுடன் இணையும் சூப்பர் ஹிட் வெற்றி கூட்டணி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தயாரிப்பில் 'மீன் குழம்பும் மண்பானையும்' என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது

ரஜினியின் '2.0': எந்திர லோகத்து சுந்தரியே பாடல் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான '2.0' படத்தின் இரண்டு பாடல்கள் நேற்று வெளியாகியுள்ளது.