அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஸ்கார், நோபல் விருதுகள் கொடுக்க வேண்டும்: செல்லூர் ராஜூ
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் நல்லவேளை நான் பிழைத்து விட்டேன் என்றும் எனக்கு பதிலாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாட்டிக் கொண்டார் என்றும் காமெடியாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி கொடுத்தபோது அணில்கள் மின்கம்பியில் செல்வதால் ஏற்பட்ட உராய்வில் தான் மின்தடை ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தார். அவருடைய இந்த பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
முதலில் நான் தப்பித்து விட்டேன், ஊடகங்கள் வலைதளங்கள், ஏன் நம்முடைய முதலமைச்சர் உள்பட பலர் என்னை நவீன விஞ்ஞானி என்று கிண்டல் செய்தார்கள். தற்போது புதிய நவீன விஞ்ஞானியாக நம்முடைய மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் என்னுடைய இடத்தை பிடித்துக்கொண்டார் நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன் என்று என்னுடைய தலைவர் பாடி இருப்பார். அதுபோல் இப்போது என்னை விட்டுவிட்டு அணிலை கண்டுபிடித்த மின்சாரத்துறை அமைச்சர் தான் உண்மையான விஞ்ஞானி என மக்கள் புரிந்து கொண்டார்கள்.
எங்களுடைய 10 ஆண்டு ஆட்சியில் அணில்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு போய் இருந்தது. திமுக ஆட்சி வந்தவுடன் தான் தற்போது அணில்கள் திரும்பி தமிழகத்திற்கு படையெடுத்து வந்து மின்கம்பியில் மட்டும் தான் செல்கிறது. இது ஒரு புதிய கண்டுபிடிப்பு. இதற்கு உண்மையிலேயே ஆஸ்கார் விருதும் நோபல் விருதும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கலாய்த்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments