ஓபிஎஸ் அணியில் மற்றொரு முன்னாள் அதிமுக அமைச்சர்

  • IndiaGlitz, [Monday,April 03 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டாக உடைந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதால் சசிகலா அணியை டிடிவி தினகரன் தலைமையேற்று வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் தற்போது 12 எம்பிக்களும், 12 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தந்துள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பின்னர் இன்னும் ஒருசில எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்று முன்னர் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
இன்று ஓபிஎஸ் முன்னிலையில் தனது ஆதரவை தெரிவித்த ராஜகண்ணப்பன், 'அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும், ஓபிஎஸ் உடன் இணைந்து கட்சியை மீட்டெடுப்போம் என்றும் சூளுரைத்தார். ஆர்.கே.நகரில் மதுசூதனன் வெற்றி பெறுவது ஜனநாயகம் வெற்றி பெறுவதாகும் என்று கூறியுள்ளார்.
ராஜகண்ணப்பன் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டுவரை அதிமுக அமைச்சரவையில் பொதுப்பணி துறை மற்றும் மின்சார துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என நான்கு துறைகளிலும் வெற்றி பெற்று இந்திய சினிமாவின் முக்கிய கலைஞராக விளங்குபவர் பிரபுதேவா.

குடிபோதையில் மத்திய பெண் அமைச்சர் காரை பின் தொடர்ந்த 4 மாணவர்கள் கைது

பின்தொடர்ந்ததாக டெல்லி பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.,

முதல் வேலை விவசாயிகளை காப்பது? தயாரிப்பாளர் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் பேட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: நிர்வாக கமிட்டி உறுப்பினர்களின் விபரம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்று விஷாலின் 'நம்ம அணி' கிட்டத்தட்ட அனைத்து பதவிகளையும் கைப்பற்றிய செய்தியை சற்று முன் பார்த்தோம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். முடிவுகளின் முழுவிபரங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். முடிவுகளின் முழுவிபரங்கள்