ரூ.3 கோடி முதல் ரூ.30 லட்சம் வரை: நடிகை சாந்தினி கும்பல் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை சாந்தினியை யார் என்றே தெரியாது என்றும், அவரை நான் பார்த்ததே இல்லை என்றும் அவரது கும்பல் தன்னிடம் ரூபாய் 3 கோடி வரை கேட்டு மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கமளித்துள்ளார்.
‘நாடோடிகள்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை சாந்தினி நேற்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் நெருக்கமாக பழகி குடும்பம் நடத்தியதாகவும் இதன் காரணமாக தான் கர்ப்பமாக இருந்த நிலையில் வலுக்கட்டாயமாக கர்ப்பத்தை கலைக்க வைத்ததாகவும், மேலும் தன்னை திருமணம் செய்ய மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் புகாரில் அளித்திருந்தார்.
இந்த புகார் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவர்கள் ’சாந்தினி என்ற பெண் யார் என்று தனக்கு தெரியாது என்றும், புகைப்படம் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் வெளியே சொல்ல மாட்டோம் என்ற அவரது கும்பல் மிரட்டியதாகவும், நேரில் சென்று விசாரித்த போது அந்த கும்பல் பணம் பறிக்கும் கும்பல் என தெரிய வந்ததாகவும் கூறினார். முதலில் ரூ.3 கோடி வரை பேரம் பேசிய அந்த கும்பல் அதன் பின்னர் படிப்படியாக இறங்கி 30 லட்சம் வரை கொடுங்கள் என தன்னிடம் பேரம் பேசினார்கள் என்றும், தவறு செய்யாத நான் ஏன் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்? பயப்படவேண்டும் என்று பணம் கொடுக்க மறுத்து விட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் இந்த விளக்கத்தை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments