அரசியல் பெருங்கடலில் விஜய் மூழ்குவாரா? கரை சேருவாரா? முன்னாள் அதிமுக அமைச்சர் கருத்து..!

  • IndiaGlitz, [Friday,February 02 2024]

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில நிமிடங்களுக்கு முன் அவர் தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்ததோடு அவர் தான் அரசியலுக்கு வந்தது எதனால்? என்பதை விளக்கியதோடு, அரசியல் என்பது ஒரு புனிதமான சேவை என்பதையும் தனது விரிவான அறிக்கையில் விளக்கி இருந்தார்.

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல் நபராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் என்பது பெரும் கடல், அதில் நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு, மூழ்கி போகிறவர்களும் உண்டு, விஜய் கரை சேர போகிறாரா? அல்லது மூழ்க போகிறாரா? என்பதை பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

சிவாஜி கணேசன் முதல் விஜயகாந்த் வரை ஜெயக்குமார் கூறியபடி அரசியலில் மூழ்கித்தான் போய் உள்ளார்கள். அவர்களைப்போல் விஜய்யும் மூழ்குவாரா அல்லது கரை சேர்ந்து எம்ஜிஆர் போல் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அரசியல் என்பது தொழில் அல்ல, புனிதமான பணி.. கட்சி பெயரை அறிவித்தார் விஜய்..!

நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி விரைவில் தொடங்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

32 வயதில் காலமானார் நடிகை பூனம் பாண்டே.. என்ன நடந்தது?

பிரபல பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 32.  

'சிம்பு 48' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்..!

சிம்புவின் பிறந்தநாள் நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 48வது படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் இன்று வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கமல்ஹாசனின்

'சிறகடிக்க ஆசை': மலேசிய மாமாவை அடுத்து அடுத்த இடி.. முத்து கண்டுபிடித்த உண்மையால் ரோகிணி அதிர்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறக்கடிக்க ஆசை' என்ற சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக அண்ணாமலை தனது மூன்று மகன்கள் மற்றும் மருமகள்களுடன்

ஹாலிவுட் வாய்ப்பை பெற்ற 'பொன்னியின் செல்வன்' நடிகை.. அதுவும் யுனிவர்சல் பிக்சர்ஸ் படத்தில்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை, ஹாலிவுட்டில் வாய்ப்பு பெற்றுள்ள நிலையில் அவர் நடித்த ஹாலிவுட் படம்