வரிச்சலுகையுடன் திரையரங்குகளில் 'ஜெய்பீம்': முதல்வருக்கு கோரிக்கை வைத்த முன்னாள் அமைச்சர்
Send us your feedback to audioarticles@vaarta.com
’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு வரிச்சலுகை அளித்து திரையரங்குகளில் வெளியிட தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என முன்னாள் கர்நாடக அமைச்சர் ஒருவர் கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
முன்னாள் கர்நாடக மாநில அமைச்சர் மகாதேவப்பா என்பவர் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தான் ’ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்ததாகவும், மிகவும் அற்புதமாக இருந்ததாகவும், இந்த படத்தில் சூர்யா தூணாக இருந்ததாகவும் மேலும் அவரே இந்த படத்தை தயாரித்தது மிகவும் சரியான முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த படம் ஓடிடியில் வெளியானதால் அனைவரையும் போய் சேரவில்லை என்றும் இணை எனவே திரையரங்குகளில் வெளியானால் இந்தப்படம் மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் தமிழக முதல்வர் இது குறித்து நடவடிக்கை எடுத்து இந்த படத்திற்கு வரிச்சலுகை அளித்து திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
பொதுவாக ஓடிடியில் நேரடியாக ரிலீசான படங்கள் திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையீட்டால் கண்டிப்பாக ’ஜெய்பீம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்தும் ஒரு சில அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டு வரும் நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியிட்டால் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
My Letter to Tamilnadu C M Sri.M.K Stalin requesting to exempt tax and give subsidy to screen Jai Bhim movie in theatres which is a honest effort to exhibit the sufferings of Daliths, Adivasis and nomadic tribes around us@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/4vAbzwypSL
— Dr H.C.Mahadevappa (@CMahadevappa) November 15, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments