இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் எவ்வளவு? போட்டு உடைத்த மாதவன் நாயர்..!
- IndiaGlitz, [Saturday,August 26 2023]
இஸ்ரோ விஞ்ஞானிகள் சம்பளம் மிகவும் குறைவு என்றும் இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிவதால் தான் குறைந்த செலவில் விண்கலங்களை விண்ணிற்கு செலுத்த முடிகிறது என்றும் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தியாவின் சந்திராயன் 3 நிலவை சென்றடைந்தது என்பதும் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் குறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வளர்ந்த நாடுகளில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்படும் சம்பளத்தை விட ஐந்து மடங்கு குறைவாகவே இஸ்ரோ விஞ்ஞானிகள் பெற்று வருகின்றனர் என்றும் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் யாரும் கோடீஸ்வரராக இல்லை என்றும் சாதாரணமான வாழ்க்கை தான் வாழ்ந்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
குறைந்த சம்பளம் என்றாலும் முழு ஈடுபாட்டுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் பணிபுரிந்து வருவதால் தான் குறைந்த செலவில் இந்தியாவால் விண்கலங்களை அனுப்ப முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து சாதனை செய்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளம் அதிகரித்து கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.