பாஜகவில் இணையும் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர்?  பரபரப்பு தகவல்

ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என பரபரப்பாக பேசப்பட்டவர் திடீரென இன்று பாஜகவில் இணைவதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் ’தான் முதல்வர் வேட்பாளர் இல்லை’ என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் தான் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று பரவலாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் அவர் தன்னை இணைத்துக் கொள்ள இருப்பதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியாகி உள்ளது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதும், அரசியலில் இறங்கி சேவை செய்யப் போவதாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கு மிக நெருக்கமானவராக கருதப்பட்ட இவர் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளராக நிற்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் திடீரென பாஜகவில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கறுப்பினத்தவரை பின்னால் இருந்து பலமுறை சுட்ட போலீஸ்!!! US இல் வெடிக்கும் அடுத்த சர்ச்சை!!!

அமெரிக்காவில் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீஸார் பிடியில் சிக்கி உயிரிழந்தார்.

சரசரவென சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்!!! இடிபாடுகளுக்குள் 70 சிக்கியதாக கவலை!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் நேற்று மாலை 5 மாடிக்கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீடிரென்று சரிந்து விழுந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

எஸ்பிபி சைகை காட்டி என்னை நலம் விசாரித்தார்: எஸ்பிபி சரண் நெகிழ்ச்சி 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை கடந்த 3 நாட்களாக சீராக இருப்பதாக

இயக்குனர் கார்த்திக் ராஜூவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் நடிகை நாயகியா?

தினேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'திருடன் போலீஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் ராஜூ.

குடும்பத்துடன் செல்பி எடுத்து பிறந்த நாளை கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்!

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்துடன் செல்பி எடுத்து கொண்டாடினார் என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது