கல்விக்கு ஏது வயது? 86 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய முன்னாள் முதல்வர்!

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

ஹரியாணா மாநிலத்தில் முன்னாள் முதல்வராக பதவிவகித்த ஓம் பிரகாஷ் சவுதாலா தற்போது தனது 86 ஆவது வயதில் 10 ஆம் வகுப்பு ஆங்கிலத்தைத் தேர்வை வெற்றிக்கரமாக எழுதி முடித்துள்ளார்.

கடந்த 1999-2005 வரை ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக பதவிவகித்த ஓம் பிரகாஷ் சவுதாலா தன்னுடைய பதவிக்காலத்தில் படிக்காத முதல்வர் என்ற விமர்சனத்தை எதிர்க்கொண்டார். அதனால் தன்னடைய கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் எனக் கருதி திறந்தநிலை கல்வி வாரியம் வாயிலாக படிக்க முடிவெடுத்தார்.

ஆனால் முதல்வர் பதவிக்குப் பின்பு கடந்த 2013 ஆம் ஆண்டு தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு 10 ஆண்டு சிறை தண்டனையை டெல்லி நீதிமன்றம் வழங்கியது. மேலும் உச்ச நீதிமன்றமும் இந்தத் தண்டனையை உறுதிசெய்தது.

இதனால் கடந்த 10 வருடங்களாக டெல்லி திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த இவர் கடந்த ஜுன் மாதம் தண்டனை முடிந்து வெளியே வந்துள்ளார். மேலும் கடந்த காலங்களில் இடைநின்று போன தனது கல்வியைத் தொடர வேண்டும் என நினைத்த அவர் சிர்சா மாவட்டத்தில் உள்ள பள்ளியொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய 10 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்துள்ளார்.

இதற்கு முன்பே 12 ஆம் வகுப்பு தேர்வை திறந்த நிலை கல்வி வாரியத்தின் மூலம் இவர் எழுதி இருந்தாலும் 10 ஆம் வகுப்பை முடிக்காமல் இருப்பதால் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்குமுன்பு 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய ஓம் பிரகாஷ் சவுதாலா அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, ஆங்கிலப் பாடத்தைத் தவறவிட்டதால் அந்தத் தேர்வை மீண்டும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா அரசியல் நிலைப்பாடு, சிறை தண்டனை, அவதூறான விமர்சனம் இப்படி பல்வேறு இடர்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டாலும் இத்தனை வயதிற்குப் பிறகு கல்வி மீது ஆர்வம் காட்டிவருவது பலரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

More News

தமிழில் டப் செய்வதை நிறுத்திய 'மார்வெல் ஸ்டுடியோவின் அடுத்த படம்: காரணம் என்ன?

கிட்டத்தட்ட அனைத்து ஹாலிவுட் படங்களும் இந்திய மொழிகளில் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பாக தமிழ் மொழியில் வெளியாகாத ஹாலிவுட் படங்களே இல்லை என்று கூறலாம்.

'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கே.ஜி.எஃப் 2' தற்போது

அரசு மருத்துவமனையில் குழந்தைப் பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர்… குவியும் பாராட்டு!

கேரளாவில் பணியாற்றிவரும் சப்-கலெக்டர் ஒருவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்

முதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய்சேதுபதி: முக்கிய கோரிக்கை வைத்ததாக தகவல்!

முதலமைச்சரை நேரில் சந்தித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது

2 டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை: படப்பிடிப்பு ஒத்திவைப்பு!

ஏற்கனவே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நடிகை ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்தோம். தற்போது இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட