மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரடோனா: ரசிகர்கள் அதிர்ச்சி
- IndiaGlitz, [Tuesday,November 03 2020]
உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர்களில் ஒருவரான மாரடோனா, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது
கடந்த 1986 ஆம் ஆண்டு அர்ஜெண்டினா நாட்டிற்காக உலக கோப்பையை வென்று கொடுத்த வீரர் மாரடோனா என்பது தெரிந்ததே. உலகப் புகழ்பெற்ற மாரடோனாவின் கோல்கள் இன்றளவும் ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடிய மாரடோனா, திடீரென அர்ஜெண்டினாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
மாரடோனா உடலுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்றும் இருப்பினும் அவரது உடலுக்கு பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்பது மட்டும் உறுதி எனவும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது
மேலும் மாரடோனாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் இல்லை என்றும், அவர் தனது மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை மருத்துவமனையில் ஓய்வு எடுப்பார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
Diego Maradona did not have a stroke. He was hospitalized by recommendation of his personal physician to stabilize him due to his alcohol problems, his emotional state and all his health issues that are complicating his well being. He will remain in the hospital 3-5 days.
— ANDRES CANTOR (@AndresCantorGOL) November 3, 2020