முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்!

  • IndiaGlitz, [Saturday,August 24 2019]

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 66

கடந்த சில நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

சமீபத்தில்தான் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் மரணம் அடைந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமாகியுள்ளது அக்கட்சிக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ராஜ்யசபாவின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும் அருண்ஜெட்லி பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அருண்ஜெட்லியின் மறைவுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

விஜய்யின் 'பிகில் படத்துடன் மோதுகிறதா பிரபல நடிகரின் படம்?

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ்

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் புதிய அப்டேட்!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது

பிரசவம் பார்த்த டாக்டருக்கு நன்றி சொன்ன பிக்பாஸ் நடிகை!

பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான சுஜா வருணி, சிவாஜி பேரன் சிவகுமாரை கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானார்

ஷெரினிடம் வேலை செய்யாத வனிதாவின் வத்திக்குச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பார்வையாளர்கள் வனிதாவை வெளியேற்றிய பின்னரும், மீண்டும் வனிதாவை பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாளராக அனுமதித்துள்ளது

நமக்கு அமேசானில் ஆர்டர் போட மட்டும்தான் தெரியும்: விவேக்

அமேசான் காடுகள் தீயால் கடந்த சில நாட்களாக எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தீ விபத்து குறித்து உலக நாடுகளின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகுந்த கவலையை தெரிவித்து வருகின்றனர்.