முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடாராஜன் வீட்டில் சிபிஐ ரெய்டு

  • IndiaGlitz, [Saturday,September 09 2017]

பாரத பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்றதில் இருந்தே பல காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடந்துள்ள நிலையில் இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பணிபுரிந்து வந்த ஜெயந்தி நடராஜன் பின்னர் திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் அவர் அமைச்சராக இருந்தபோது அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்பைடையில் இன்று அவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

ஜெயந்தி நடாராஜன் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக இருந்த போது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 512 ஏக்கர் நிலத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டு ஒதுக்கீடு நடந்ததாகவும், அந்த நிறுவனத்தில் சமீபத்தில் சிபிஐ சோதனை செய்தபோது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஜெயந்தி நடராஜன் வீட்டில் தற்போது சோதனை நடந்து வருவதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.