முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல்நலக் குறைவால் சென்னை அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 87.
நெல்லை மாவட்டம், களக்காட்டைச் சேர்ந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் அவர்கள் 1932ஆம் ஆண்டு டி.எஸ். நாராயணய்யர், சீதாலட்சுமிக்கு மகனாக பிறந்தார். இயற்பியல் பட்டப்படிப்பு முடித்த பின், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்த அவர் அதன் பின்னர் ஐ.ஏ.எஸ் முடித்து கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறை இயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார்.
அதன்பின்னர் 1990ஆம் ஆண்டு டிசம்பரில் தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்ற டி.என்.சேஷன், தனது பதவிக்காலத்தில் பல அதிரடி நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் நடைமுறையில் சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தார். இவரது சில நடவடிக்கைகள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளான போதிலும் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர்திருத்தங்களை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் செலவுகளை வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பது உள்ளிட்ட பல புதிய நடைமுறைகளை கொண்டு வந்தார். அரசியல்வாதிகளுக்கு பணியாமல் இந்தியாவில் தேர்தலை நியாயமாக நடத்த முடியும் என்பதை நிரூபித்தவர் இவர் தான் என்பதும் தேர்தல் ஆணையத்திற்கு இவ்வளவு அதிகாரம் இருக்கின்றதா? என்று அரசியல்வாதிகளையே நடுங்க வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓய்வுக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்றும் தேர்தல் ஆணையம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது டி.என்.சேஷன் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments