முன்னாள் திமுக எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்!

  • IndiaGlitz, [Sunday,April 28 2019]

முன்னாள் திமுக எம்பியும், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான வசந்தி ஸ்டான்லி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 56

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய வசந்தி ஸ்டான்லி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நன்மதிப்பை பெற்றவர். கனிமொழியின் ஆதரவாளர் என்று கருதப்படும் இவர் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்றிரவு வசந்தி ஸ்டான்லி காலமானார். அவருடைய உடல் சென்னை லாயிட்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று மாலை 6 மணி வரை வைக்கப்பட உள்ளது. இதனையடுத்து அவரது சொந்த ஊரான பாளையங்கோட்டை எடுத்துச் செல்லப்பட்டு நாளை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வசந்தி ஸ்டான்லி மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவருடைய மறைவு திமுகவுக்கு பேரிழப்பு என்று தெரிவித்தார்.

More News

அவெஞ்சர்ஸ் படம் பார்த்ததால் உயிருக்கு போராடிய இளம்பெண்

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் படமான 'அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம்' திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை செய்து வருகிறது.

ரூ.90 லட்சம் மோசடி: போலீசில் புகார் அளித்த பிரபல நடிகை

தன்னிடம் மேனேஜராக இருந்தவர் தனக்கு தெரியாமல் ரூ.90 லட்சம் மோசடி செய்ததாக நடிகை குட்டிபத்மினி இன்று போலீஸ் கமிஷனரிடம் நேரில் புகார் அளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார்' படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே.

நிச்சயம் செய்த பெண்ணை கத்தியால் குத்தி, தற்கொலைக்கு முயன்ற தாய்மாமன்!

நிச்சயம் செய்த அக்கா மகளை கத்தியால் குத்திவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்ற வாலிபரால் காஞ்சிபுரம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புயலும் இல்லை, மழையும் இல்லை, கடுமையான வெயில்தான்: ஃபனி புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி ஃபனி புயலாகவும் மாறியதால் இந்த புயல் தமிழகம் வழியே கரையை கடக்கும் என நேற்று வரை எதிர்பார்க்கப்பட்டது.